Thursday, November 7, 2024

டொனால்ட் டிரம்ப் பற்றி பாபா வங்கா கணித்ததும் நடந்ததும்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்வாகியுள்ளாா். அந்நாட்டின் 47-ஆவது அதிபராக அவா் தோ்வாகியுள்ள நிலையில், துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தேர்தலில் களமிறங்கி வெற்றியை வசமாக்கிக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன், கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் தோ்தலில் வென்று, அதிபரான போது, அவருக்கு வயது 77. ஆனால் தற்போது, அந்நாட்டின் புதிய அதிபராக தோ்வாகியுள்ள டிரம்ப்புக்கு வயது 78. இதன்மூலம், அதிக வயதில் அமெரிக்க அதிபராக தோ்வானவா் என்ற பைடனின் சாதனையை டிரம்ப் முறியடித்துள்ளாா்.

இந்த நிலையில், புதிதாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் பற்றி, உலகின் பல நிகழ்வுகளை முன் கணித்துச் சொல்லும் திறன் பெற்றதாகக் கூறப்படும் பாபா வங்கா, டிரம்ப் பற்றி கணித்துச் சொன்னதும், உண்மையில் நடந்ததும் என்ன என்பது அலசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க.. இந்தியர்களுக்கு கசப்பான செய்தி: குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்!

பல்கேரியாவைச் சேர்ந்த ஆன்மிகவாதியாக அறியப்படும் பாபா வங்கா, இரண்டாம் உலகப் போர், செர்னோபில் பேரழிவு, சோவியத் யூனியனின் வீழ்ச்சி என பல விஷயங்களை முன்கணித்துள்ளார்.

அதுபோலவே, உலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு மிக முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியிருந்தார். ஒன்று, விளாதிமிர் புதின், மற்றொருவர் டொனால்ட் டிரம்ப்.

அதாவது, டொனால்ட் டிரம்ப் பற்றி பாபா வங்கி கணித்திருந்தது என்னவென்றால், டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது. மர்ம நோயால் அவருக்கு காதுகள் பாதிக்கும். மூளையில் கட்டி ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், அவர் சொன்னது போல, டிரம்ப் உயிருக்கு ஆபத்து நேரிட்டது. 2024ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி டிரம்ப் பிரசாரத்தில் இருந்தபோது, 20 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கித் தோட்டாக்கள் டிரம்பின் காதுகளை உரசிச் சென்றது. நல்வாய்ப்பாக டிரம்ப் உயிர் தப்பினார்.

டொனால்ட் டிரம்ப் பற்றி கிட்டத்தட்ட பாபா வங்காவின் கணிப்பு, துல்லியமாக இருந்ததாகவே கூறப்படுகிறது.

அதிபா் தோ்தல் பரப்புரையின்போது டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது. இந்நிலையில், அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா், அந்த சம்பவத்தை குறிப்பிட்டு டிரம்ப் கூறியதாவது: ஏதோ ஒரு காரணத்துக்காக எனது உயிரை கடவுள் காப்பாற்றியதாக பலா் என்னிடம் கூறினா். அமெரிக்காவை காக்க வேண்டும், அமெரிக்காவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்த காரணமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024