Sunday, September 22, 2024

தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா…

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா… மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா... மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வடமாநில மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் இந்தாண்டு ராஜஸ்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், அங்குள்ள ஆர்ஓ ஆலையிலும் தண்ணீர் குறைந்துள்ளது.

ராஜஸ்தானில் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் பாலி மாவட்டத்திலும் எதிரொலிக்கிறது. கொளுத்தும் வெயிலால் பாலியில் ஆர்ஓ வாட்டர் குடிப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. நகரில் 70-க்கும் மேற்பட்ட ஆர்ஓ பிளாண்ட்கள் நிறுவப்பட்டும், நகரவாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

ஒரு மாதத்தில் ரூ.1.31 கோடி வருமானம்:

இந்த கோடை காலத்தில் பாலி மக்கள் ரூ.1.31 கோடி மதிப்பிலான குளிர்ந்த ஆர்ஓ தண்ணீரை குடித்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடைக்காலத்தில் தண்ணீர் கேன்களுக்கு கிராக்கி அதிகமாக இருக்கும் என்று சப்ளையர்கள் கூறியுள்ளனர். இந்த ​​கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு தண்ணீர் கேன்களை ஆர்டர் செய்ததால், ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் வரை சப்ளையர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.

விளம்பரம்

ஆயிரக்கணக்கான தண்ணீர் கேன்கள் வழங்கப்படுகின்றன :

கோடைக்காலத்தில் தண்ணீர் கூட தீயைப் போல் சுடும். எனவே மக்களின் தண்ணீர் கேன் தேவை அதிகமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ஓ ஆலையை இயக்கும் விக்ரம் சிங் கூறுகையில், பாலி நகரில் சுமார் 70 ஆர்ஓ ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. சராசரியாக, ஒரு ஆர்ஓ ஆலை நடத்துபவர் கோடையில் நாளொன்றுக்கு 250 தண்ணீர் கேன்களை சப்ளை செய்து வருகிறார். இதன் அடிப்படையில் அனைவரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 17 ஆயிரத்து 500 தண்ணீர் கேன்களை சப்ளை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

400 பேருக்கு வேலைவாய்ப்பு:

மேலும், இது குறித்து விக்ரம் சிங் கூறுகையில், மாநகரில் ஒரு கேன் ரூ.25-க்கு விற்கப்படும் நிலையில், சுமார் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 500 வருமானம் ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார். மாதந்தோறும் சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் கேன்களில் சுமார் 1.5 கோடி லிட்டர் குளிர்ந்த நீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆர்ஓ ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் இந்தத் தொழிலில் 400க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தண்ணீரிலிருந்து வாழ்வாதாரம்:

ஆர்ஓ ஆலை நடத்துபவர் விக்ரம் சிங் கூறுகையில், ஒரு ஆலையை இயக்க குறைந்தபட்சம் 6 தொழிலாளர்கள் தேவை. இவர்களில் ஆலை நடத்துபவர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் விநியோக தொழிலாளர்கள் உள்ளனர். ஆர்ஓ ஆலையில் குறைந்தது 450 பேர் வேலை செய்கிறார்கள். எனவே இவர்களுடைய வாழ்வாதாரம் இந்த வேலையை நம்பியிருக்கிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Water Crisis

You may also like

© RajTamil Network – 2024