தந்தையை இழந்த போது ஏற்பட்ட வேதனையை உணர்கிறேன் – ராகுல் காந்தி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

தந்தையை இழந்த போது ஏற்பட்ட வேதனையை மீண்டும் உணர்கிறேன் – வயநாட்டில் ராகுல்காந்தி உருக்கம்!தந்தையை இழந்த போது ஏற்பட்ட வேதனையை மீண்டும் உணர்கிறேன் - வயநாட்டில் ராகுல்காந்தி உருக்கம்!

நிலச்சரிவால் உருக்குலைந்த இடங்களை பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முகாம்களில் உள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த போது, தனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வேதனையை உணந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலையில் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதையடுத்து, மேப்பாடி அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்ற அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், இருவரும் முகாமிற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, ராகுல் காந்தியிடம், தங்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்த போது, செய்து தருவதாக அவர் உறுதியளித்தார் என முகாமில் உள்ள உன்னிக்கிருஷ்ணன் என்பவர் தெரிவித்தார்.

விளம்பரம்

இதனிடையே, வயநாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, நிலச்சரிவு பாதிப்பு, வயநாடு மற்றும் கேரளாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த போது, தனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட அளவுக்கு வேதனையை உணர்ந்ததாகவும் ராகுல் காந்தி கூறினார்.

#WATCH | Kerala: Leader of Opposition in Lok Sabha and former Wayanad MP Rahul Gandhi along with party leader Priyanka Gandhi Vadra visit A relief camp AT Meppadi Govt Higher Secondary School in Wayanad to meet the survivors of the landslide.
A landslide occurred here on 30th… pic.twitter.com/YJ1vAfVRWl

— ANI (@ANI) August 1, 2024

விளம்பரம்

தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, குடும்பத்தை இழந்தவர்களின் மனநிலையை, தந்தையை இழந்த தங்களைப் போன்றவர்களால் உணர முடிவதாகவும், ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

விளம்பரம்இதையும் படிங்க: 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது குமரி அனந்தனுக்கு அறிவிப்பு!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Priyanka Gandhi
,
RahulGandhi
,
Wayanad

You may also like

© RajTamil Network – 2024