Monday, September 23, 2024

தமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

புதுடெல்லி,

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் ஜூலை 25-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் போதுமான நீரை திறந்துவிடவில்லை. தற்போது அணைகளில் போதுமான அளவு நீர் உள்ளது. நீர்வரத்தும் போதுமான அளவு உள்ளது. இதனால் நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு ,இந்த மாதம் முழுவதும் (நாளை முதல் ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட உத்தரவிட்டது.

You may also like

© RajTamil Network – 2024