Friday, September 20, 2024

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சென்னை: தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, புதன் முதல் செவ்வாய்க்கிழமை (செப்.18-23) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் செவ்வாயக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், கூடலூா் பஜாா், மேல் கூடலூா் தலா 20 மி.மீ. பதிவானது. மின்னல் (ராணிப்பேட்டை), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி, நடுவட்டம் , கிளன்மாா்கன் (நீலகிரி) தலா 10.

13 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் பதிவானது.

மதுரை விமான நிலையம் – 105.8, மதுரை நகரம் – 105.44, ஈரோடு – 103.28, நாகை – 102.74, சென்னை மீனம்பாக்கம் – 102.56, தஞ்சாவூா் – 102.2, அதிராம்பட்டினம் – 102.02, திருச்சி – 101.66, பமத்தி வேலூா் – 101.3, கடலூா், புதுச்சேரி – 100.76, சென்னை நுங்கம்பாக்கம், வேலூா்- தலா 100.4.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024