Tuesday, September 24, 2024

தமிழகத்தில் இயல்பைவிட 88% கூடுதல் மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

தமிழகத்தில் இயல்பைவிட 88% கூடுதல் மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் தற்போதுவரை 88 சதவீத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.இயல்பைவிட 88 சதவீதம் கூடுதல் மழை

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 88 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகம், கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டிதீர்த்து வருகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாகும். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பூமி குளிர்ந்துள்ளது, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகின்றது.

தென்மேற்குப் பருவமழையின் மூலம் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைபொழிவைப் பெறும். இதன்படி கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 18(இன்று) வரை தமிழகத்தில் 160.6 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பெய்யும் சராசரி மழை அளவு 85.5 மி.மீ ஆகும். ஆனால் தற்போதுவரை தமிழகத்தில் 88 சதவீத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024