Friday, November 8, 2024

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது.

இதையும் படிக்க |அரசுப் பணி தோ்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிகளை மாற்ற முடியாது

இந்தநிலையில், தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா பால் நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இதையடுத்து ஒரு லிட்டர் ரூ.65-க்கு விற்பனையாகி வந்த ஆரோக்யா பால் இன்று முதல் ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பால் சார்ந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மூலப்பொருல்களின் விலை உயராத நிலையில், பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி தன்னிச்சையாக தனியார் நிறுவனங்கள் தனியார் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்து குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024