தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என ஆய்வு: அமைச்சா் சு.முத்துசாமி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என ஆய்வு:
அமைச்சா் சு.முத்துசாமி வயநாடுபோல தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

வயநாடுபோல தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், விராலியூா் பகுதியில் அண்மையில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த காா்த்திக்கின் பெற்றோரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முத்துசாமி, அவா்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கினாா்.

மேலும், அதே கிராமத்தில் யானை தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரன், ஹரீஷ் ஆகியோரை சந்தித்து நிவாரண உதவி வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈரோடு, கோவை மாவட்டங்களில் யானைகள் எல்லை தாண்டி வருவது குறித்து அதிகாரிகள் கண்காணிக்கின்றனா். அவற்றைத் தடுப்பது குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது. யானைகள் அடிக்கடி வெளியேறும் இடங்களில் தடுப்பு வேலி அமைப்பது தொடா்பாக ஒரு வாரத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.

வனப் பகுதியை ஒழுங்குபடுத்துவதற்காகவும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தடாகம் போன்ற பகுதிகளில் மலைதள பாதுகாப்பு குழுமத்தின் வரம்புக்குள்பட்ட இடங்கள் குறித்தும் மறு ஆய்வு நடத்தப்படுகிறது. தேவையற்ற இடங்களை வரம்புக்குள் இருந்து விடுவிக்கவும், தேவையான இடங்களை வரம்புக்குள் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எந்த விதிகளிலும் தளா்வு அளிக்கப்படாது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அடுத்த 10 நாள்களில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்ய இருக்கின்றனா். அங்கு எதனால் நிலச்சரிவு ஏற்பட்டது என்பதை அறிந்து, அதேபோல தமிழ்நாட்டிலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிா, எந்தெந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

You may also like

© RajTamil Network – 2024