தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது .

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/dxwEbUt4rA

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 25, 2024

Related posts

UP: BJP Leader Princy Chauhan Accuses Toll Employee Of Misbehaviour; Stages Protest

‘Will Get Married For Such Gifts’: Netizens React To Couple Presented With Coldplay Tickets On Wedding Day; Video Viral

Bengaluru Weather Update: IMD Predicts Moderate Showers With Thunder & Lightning; AQI In Good Category