Friday, September 20, 2024

தமிழக சட்டப்பேரவை 24ம் தேதி கூடுகிறது

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

தமிழக சட்டப்பேரவை வரும் 24ம் தேதி கூடுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெற்றது.

வழக்கமாக பட்ஜெட்டையெட்டி, துறைகள்தோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படும். ஆனால், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் முடிவுற்றதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஜூன் 24ம் தேதி காலை 10 மணிக்கு துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.

You may also like

© RajTamil Network – 2024