தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து படகுகளிலிருந்த ஜெபஸ்டியன் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாச்சி (36), சாமுவேல் (33), பிரிச்சோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியா ஸ்டெடின் (27), துரை (39), அருள் தினகரன் (23), சுரேஷ் (45), ஜீவன் ஃப்ரைஷர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) ஆகிய 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மீனவர்கள் அடைக்கப்படுவார்கள், எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 55 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து, 413 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!