Saturday, September 28, 2024

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு: பிரமாண பத்திரத்தை வாட்ஸ்-அப் குழுவில் பகிர முன்னாள் டிஜிபி நட்ராஜூக்கு கோர்ட் உத்தரவு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு: பிரமாண பத்திரத்தை வாட்ஸ்-அப் குழுவில் பகிர முன்னாள் டிஜிபி நட்ராஜூக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளேன் என முன்னாள் டிஜிபி நட்ராஜ் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை வாட்ஸ்-அப் குழுவில் பகிர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தனக்கு எதிராக திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபியும், அதிமுகமுன்னாள் எம்எல்ஏ-வுமான நட்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்றுநடைபெற்றது. அப்போது மனுதாரரான நட்ராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘‘தமிழக முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளேன். தனக்கு எதிராக பதியப்பட்ட அவதூறு வழக்கு துரதிருஷ்டவசமானது.

முதல்வருக்கு எதிராக பகிரப்பட்டதாக கூறப்படும் அவதூறு கருத்துகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கருத்துகளை தான் அங்கீகரிக்கவும் இல்லை. எனவே தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும்கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகி, இந்த பிரமாணப் பத்திரத்தையும் அதே வாட்ஸ்-அப் குழுவில்பகிர்ந்து அதன் நகலை போலீஸா ருக்கு வழங்கும்படி கோரினர்.

24 மணி நேரத்துக்குள்… அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை 24 மணி நேரத்துக்குள் வாட்ஸ்-அப்குழுவில் பகிர்ந்து அதை போலீஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும், என உத்தரவிட்டு நட்ராஜ் தொடர்ந்தவழக்கை முடித்து வைத்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024