தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ரூ.18,178 கோடி கடன்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ரூ.18,178 கோடி கடன்இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர். கோப்புப் படம்கோப்புப் படம்

தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளதாகவும் 2018ல் கடைசியாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 2020ஆம் ஆண்டிலும், ஆந்திராவில் 2022ஆம் ஆண்டிலும் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிர் ரூ. 888 சேமித்துள்ளனர்

மாற்றுத்திறனாளிகளும் தினசரி சராசரியாக 48,636 பயண நடைகளுடன் மொத்தம் 3.93 கோடி பயண நடைகளை மேற்கொண்டுள்ளன என்பது உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024