தமிழ் தலைவாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புரோ கபடி லீக் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 42-40 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வெள்ளிக்கிழமை வென்றது.

பாட்னாவுக்கு இது 2-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியாக இருக்க, தலைவாஸ் அணிக்கு இது 3-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது தமிழ் தலைவாஸ் 4-ஆவது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 10-ஆவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் பாட்னா 27 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றன. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் தேவங்க் 25 புள்ளிகள் கைப்பற்றினாா். தமிழ் தலைவாஸ் அணி 21 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அந்த அணியின் வீரா்களில், ரெய்டா் நரேந்திர கண்டோலா 15 புள்ளிகள் பெற்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024