தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் கோர்ட்டில் ஆஜர்

by rajtamil
0 comment 45 views
A+A-
Reset

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.

சென்னை,

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தயாநிதி மாறன். அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, 'நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை' என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டினார். அதற்கு தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்தார். உண்மையிலேயே 95 சதவீத நிதியை பயன்படுத்தி உள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பேசி உள்ளதாகவும் கூறி வினோஜ் பி.செல்வம் மீது சென்னை எழும்பூர் கோர்ட்டில் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதி தர்ம பிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பின்பு வழக்கை, ஜூலை 2-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024