Wednesday, September 25, 2024

தலித் நபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? : கங்கனாவிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கங்கனாவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுப்ரியா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “சாதி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது என்று பாஜக எம்.பி. கங்கனா மீண்டும் கூறியுள்ளார். நீங்கள் ஒரு உயர் சாதியைச் சேர்ந்த பணக்காரர்; நடிகை மற்றும் ஒரு எம்.பி.யாக உள்ளீர்கள்.

அப்படி இருக்கையில் ஒரு தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியைச் சேர்ந்த ஒரு தனிநபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடி அவர்களே, உங்கள் அமைதியை இப்போதாவது முறித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டை, உங்கள் கூட்டணிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகளிடம் சொல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

आज फिर BJP MP कंगना ने कहा “जातिगत जनगणना बिलकुल नहीं होनी चाहिए”
“करनी ही क्यों है? क्यों पता करनी हैं जाति? मेरे आस पास जाति जैसा कुछ है नहीं”
मैडम आप ठहरीं सवर्ण, अमीर, स्टार, सांसद. आप क्या जानें एक दलित पिछड़ा आदिवासी या गरीब जनरल कास्ट की हालत?
पूरा वक्तव्य ज़रूर सुनिए… pic.twitter.com/1NFE7GuCDp

— Supriya Shrinate (@SupriyaShrinate) August 29, 2024

மேலும், கங்கனாவின் கருத்துக்கள் பாஜகவின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக சுப்ரியா கூறினார்.

கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் பேசியிருந்ததாவது, “எனது நிலைப்பாடு யோகி ஆதித்யநாத்தின் நிலைப்பாட்டைப் போன்றது. நாங்கள் பிரிந்தால், அழிக்கப்படுவோம். அதாவது, ஒன்றாக இருங்கள்; நன்றாக இருங்கள்.

நடிகர்களின் சாதிகூட எங்களுக்குத் தெரியாது. யாருக்குமே எதுவும் தெரியாது. என்னைச் சுற்றியுள்ளவர்கள் சாதி பற்றி கவலைப்படுவதில்லை. அதை ஏன் இப்போது தீர்மானிக்க வேண்டும்?

நாங்கள் அதை முன்பு செய்யவில்லை. இப்போது மட்டும் ஏன் செய்ய வேண்டும்? சாதி கணக்கெடுப்பு இருக்கக்கூடாது. பெண்களுக்கு பாலினத்தின் அடிப்படையில் மேம்பாடு தேவை, சாதி அல்ல. ஏழை, விவசாயிகள் மற்றும் பெண்கள் என மூன்று சாதிகள் மட்டுமே உள்ளன. நான்காம் சாதி இருக்கக் கூடாது’’ என்று தெரிவித்திருந்தார்.

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி.. யானைகளை கொல்ல திட்டம்!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கங்கனா தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்து எங்கள் கட்சியின் கருத்து அல்ல. அவர் தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.

கட்சியின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் அதிகாரம் கங்கனாவுக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024