Thursday, October 3, 2024

“தளபதி 69” படத்தில் இணைந்த நடிகர் நரேன்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

"தளபதி 69" படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். 'தளபதி 69' படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் 6-வது அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

'தளபதி 69' படத்தில் பிரபல நடிகர் நரேன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. .

Welcome to #Thalapathy69 family @itsNarain ♥️#Thalapathy69CastReveal#Thalapathy@actorvijay sir #HVinoth@thedeol@menongautham#Priyamani@hegdepooja#MamithaBaiju@anirudhofficial@[email protected]/eGLY7iyvBR

— KVN Productions (@KvnProductions) October 3, 2024

தமிழில் 'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'பள்ளிக்கூடம்', 'அஞ்சாதே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நரேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி', 'விக்ரம்' போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024