தவெக மாநாடு: நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடை!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் வி. சாலை வழியாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் திடல் அமைந்துள்ள வி. சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழிப்பாதை

இதன்படி, சென்னையிலிருந்து செல்லும் பேருந்துகள் கூட்டேரிப்பட்டு, மயிலம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்துகள் செஞ்சி வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் தொண்டர்கள், ரசிகர்கள் வருவதால் பொதுமக்கள் நலன் கருதி மற்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து பாதிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக். 27) மாலை நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அதிகாலை முதலே தொண்டர்கள், வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர்.

கார், வேன், பேருந்து என பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள், ரசிகர்கள், வருகைபுரிந்தவண்ணம் உள்ளனர்.

மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்திவைக்க இரு பகுதிகளில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் இரு பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், 7 கி. மீட்டர் தூரத்திலிருந்தே மாநாடு நடைபெறும் இடத்துக்கு தொண்டர்கள் நடந்து செல்கின்றனர்.

தவெக மாநாடு நிகழ்ச்சி நிரல்

மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்காலிகள் தற்போதே நிரம்பின.

முதலில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தவெக தலைவர் விஜய், ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி, மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்த பின்னர், மாநாடு தொடங்கும்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… ‘கண் திறக்கப்பட்ட’ நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர், மாநாட்டுக்காக இடம் கொடுத்தவர்கள். உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், நிறைவாக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024