தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் – நீதிபதிகள் வேதனை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடைபெறும். 2018 அக்டோபரில் மகாபுஷ்கரம் நடந்தது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் ஆற்றை தூய்மையாக பராரிக்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் , பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும், இல்லையேல் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என வேதனை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகளில் இருந்து ஒரு சொட்டு கழிவு நீர் கூட தாமிரபரணி ஆற்றில் கலக்ககூடாது. தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும். கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார தலைமை பொறியாளர் வரும் 26 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் 84 மண்டலங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024