Wednesday, October 23, 2024

தாமோதர் வேலி கார்ப். நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா வெற்றி!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

மேற்கு வங்கத்தைச் தளமாகக் கொண்ட தாமோதர் வேலி கார்ப்பரேஷனுடன் ஏற்பட்ட மோதலில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ஆதரவான ரூ.780 கோடி தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று அனில் அம்பானி குழும நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேற்கு வங்கத்தின் புருலியாவில் மாவட்டத்திலுள்ள உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 1,200 மெகாவாட் அனல் மின் நிலையத்தை ரூ.3,750 கோடிக்கு அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது.

சர்ச்சைகள் மற்றும் பிற காரணங்களால் இந்த திட்டம் தாமதமான நிலையில், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து தாமோதர் வேலி கார்ப்பரேஷன் இழப்பீடு கோரியது.

இருப்பினும் பல சுற்றுச் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமானது இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. 2019ல் நடுவர் தீர்ப்பாயம் ரிலையன்ஸ் இன்ஃப்ராவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, இன்று வரை திரட்டப்பட்ட வட்டியுடன் ரூ.896 கோடியை செலுத்துமாறு தாமோதர் வேலி கார்ப்பரேஷனுக்கு உத்தரவிட்டது.

நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் மேல்முறையீடு செய்த நிலையில் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024