தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

கோப்புப்படம்

பாங்காங்,

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

Related posts

ஹிஜ்புல்லா மூத்த தலைவரை குறி வைத்து லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பு: கமலா ஹாரிஸ் தேர்தல் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

பயங்கரவாத குற்றச்சாட்டு: இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது வழக்குப்பதிவு