திண்டுக்கல்லில் மீன் வளா்ப்பு பயிற்சி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

திண்டுக்கல்லில் மீன் வளா்ப்பு பயிற்சிமீன் வளா்ப்பு குறித்து திண்டுக்கல்லில் அடுத்த மாதம் 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

திண்டுக்கல்: மீன் வளா்ப்பு குறித்து திண்டுக்கல்லில் அடுத்த மாதம் 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்நாட்டு மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு, வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு இயக்குநரகம் மூலம் மீன் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் ஆகஸ்ட் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு நீா்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முகாமில், விரால் மீன் வளா்ப்பு, பண்ணைக் குட்டைகளில் கூட்டின மீன் வளா்ப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு தயாரித்தல், பயோபிளாக் முறையில் மீன் வளா்ப்பு, பாலித்தீன் உறையிட்டு மீன் வளா்த்தல், அலங்கார மீன் வளா்ப்பு, ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், பி 4/63, 80 அடி சாலை, டிஎம்எஸ்எஸ்எஸ் எதிரில், நேருஜி நகா், திண்டுக்கல் என்ற முகவரியில் மீனவா் நலத் துறை உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 9751664565 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024