தினேஷ், கலையரசனின் தண்டகாரண்யம்: முதல் பார்வை போஸ்டர் எப்போது?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இதையும் படிக்க:சந்தீப் இயக்கும் பிரபாஸின் படத்தில் பாலிவுட் தம்பதியர்?

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார்.

நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டூடியோ மற்றும் லேர்ன் அன்ட் டீச் புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிக்க: தெலுங்கில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்!

சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை (செப்.27) மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

"காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது" #தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM @officialneelam@LearnNteachprod@AthiraiAthiyan@KalaiActor@Dineshoffical@Riythvika@VinsuSam@actorshabeer@ActorMuthukumar… pic.twitter.com/Og1KsvUe4F

— pa.ranjith (@beemji) September 26, 2024

You may also like

© RajTamil Network – 2024