Monday, September 23, 2024

திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை: இபிஎஸ்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்த தகவல் எதுவும் வெளிப்படைத்தன்மையாக இல்லை என்றார் அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, திறமை அற்ற முதல்வர் மாநிலத்தை ஆண்டு வருகிறார்,

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. மாநாடு உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கு அனுமதி கேட்டாலும், அனுமதி கொடுப்பது மரபு, எங்கள் ஆட்சி காலத்தில் எல்லா கட்சிகளுக்கும் போராட்டங்கள் நடத்தவும் மாநாடுகள் நடத்தவும் அனுமதி கொடுத்தோம்,

ஆனால் நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு திமுக அரசு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது,

விஜய்யைக் கண்டு திமுக பயப்படுகிறதோ இல்லையோ, பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ, ஜனநாயக நாட்டில் யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பதுதான் முறை,

பாஜகவுடன் கூட்டணி குறித்த கருத்தை ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன், இனி இந்த விவகாரத்தில் அரைத்த மாவை அரைக்க வேண்டியதில்லை.

தவெக மாநாட்டுக்கு அனுமதி!

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அப்போது மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்,

எங்கள் ஆட்சிக் காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

இப்போது இந்த ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைத் தன்மையாக இல்லை.

அதனால்தான் நாங்கள் மட்டுமல்ல அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரலைத் தேர்தலாக இருந்தாலும் சரி சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி.

You may also like

© RajTamil Network – 2024