திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கூட்டணி கட்சி தலைவர்களில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அண்ணா உருவாக்கிய திமுக இயக்கத்தின் பவள விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவின் பவள விழாவை நாம் நடத்துவது நமக்கு கிடைத்த பெருமை. வான் மழை வாழ்த்தில் உருவான திமுக தற்போது வையகம் பாராட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அண்ணாவின் பாதையில் இம்மியளவும் விலகாமல் திராவிட மாடல் அரசை நடத்துகிறோம். திமுகவிற்கு கிடைத்துள்ள புகழ் மாலையில் அனைவருக்கும் பங்கு உள்ளது. திமுகவின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி, கொள்கை கூட்டணி.

காத்மாண்டுவில் வெள்ளம்: 32 பேர் பலி

தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இந்தியா கூட்டணி கூட உருவானது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் பிளவை எப்போதும் எவராலும் ஏற்படுத்த முடியாது. பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த அவதூறு பரப்பி சிலர் விஷம வேலைகளை செய்தனர். இந்தியாவில் ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை.

நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதோர் ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவர். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்து மாநில அதிகாரத்தை குறைக்கவே முயற்சி. மத்திய அரசு ஒரே பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். நிறைவாக நான் சொல்ல விரும்புவது, 75 ஆண்டுகளைக் கடந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்!இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024