Friday, September 20, 2024

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்

திருவள்ளூர்: திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், ஆதிதிராவிட நலக் குழு தலைவருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 76.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம், பொன்னேரி (தனி) தொகுதியில் கடந்த 1989, 1996 தேர்தல்களில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 1989-91-ல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், 1996-2001-ல் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதுமட்டுமல்லாமல், திமுக துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ள சுந்தரம், திமுகவின் ஆதிதிராவிட நலக்குழு தலைவராக பதவி வகித்து வந்தார்.

திமுகவுக்காக கடுமையாக உழைத்ததை கவுரவிக்கும் வகையில், க.சுந்தரத்துக்கு கடந்த ஆண்டு நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருதை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சுந்தரம் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தோர், சுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024