திருச்செந்தூர், ராமேசுவரத்துக்கு புதிய ரெயில் இயக்க பரிசீலனை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுச்சேரி,

புதுவை ரெயில் நிலையத்தில் ரூ.92 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஓராண்டாக இந்த பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை மத்திய ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்கு சென்ற மத்திய இணை மந்திரி சோமண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் ரெயில்வே துறையை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு புதுச்சேரியில் பல்வேறு ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.280 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது ரூ.92 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

புதுச்சேரியில் 100 சதவீதம் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து ராமேசுவரம், திருச்செந்தூருக்கு ரெயில்கள் இயக்க பரிசீலனை செய்யப்படும். பிற மாநிலங்களுடன் இணைக்கும் புதிய ரெயில்கள் கொண்டு வரும் திட்டமும் உள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024