திருப்பதியில் இந்த மாதம் 2 கருட சேவை.. புதுமண தம்பதிகள் வழிபட உகந்த நாள்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (ஆகஸ்டு) 2 நாட்கள் கருட சேவை நடக்கிறது. அதாவது, வருகிற 9-ந் தேதி கருட பஞ்சமி மற்றும் 19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமி ஆகிய நாட்களில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

9-ந் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார். இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனை போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

19-ந் தேதி ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. ஒரே மாதத்தில் 2 கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர். 21,815 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாகவும் தேவஸ்தானம் கூறி உள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024