திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல்; போலீசார் அதிரடி

திருப்பதி

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த 18-ம் தேதியன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருமலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30-ஐ வரும் 24 வரை அமல்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்