திருப்பதி கோயில் 300 ரூபாய் டிக்கெட்டுகளில் நூதன மோசடி…

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருப்பதி கோயில் 300 ரூபாய் டிக்கெட்டுகளில் நூதன மோசடி… விசாரணை அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி!திருப்பதி கோயில்

திருப்பதி கோயில்

திருப்பதி கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளில் மோசடி நடந்திருப்பதை விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா அபிவிருத்தி கழகங்கள், இந்திய ரயில்வேயின் ஐ ஆர் சி டி சி ஆகியவற்றிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கோட்டா அடிப்படையில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி சுற்றுலா அபிவிருத்தி கழகங்கள் பக்தர்களை திருப்பதி கோவிலுக்கு அழைத்து வந்து அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.

விளம்பரம்

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர், திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் கூட்டணி அமைத்து ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்

சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த மோசடியை செய்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் உடனே விசாரணையில் இறங்கினர்.

விளம்பரம்

இதையும் படிங்க : குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்கலாமா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

அதில், டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த ஒப்பந்த பணியாளர்கள் ருத்ர ராஜு, அமர்த்தா யாதவ் உட்பட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநில சுற்றுலா அபிவிருத்தி கழக ஊழியர் ஒருவர் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

இந்த டிக்கெட்டுகளை வைத்து சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், ஆட்களை திருப்பதி கோவிலுக்கு அழைத்து வந்து இருக்கிறார். திருப்பதி கோவிலில் ஸ்கேன் செய்யும் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த ஒப்பந்த பணியாளர்கள் ருத்ர ராஜு, அமர்த்தா யாதவ் உட்பட மூன்று பேர் அந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து கோவிலுக்குள் அவர்களை அனுப்பியுள்ளனர்.

விளம்பரம்
இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியல்…
மேலும் செய்திகள்…

இந்த மோசடி மூலம் அந்த கும்பலுக்கு தினமும் சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைத்ததும், ஒரு டிக்கெட்டுக்கு 2,500 ரூபாய் வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள திருமலை போலீசார், டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் ருத்ர ராஜூ, அமர்தா யாதவ் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Tirupathi
,
Tirupati Devotees

You may also like

© RajTamil Network – 2024