Monday, September 23, 2024

திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்து… விசாரணையில் வெளியான அதிர்ச்சி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்து… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்து

திருப்பதி தேவஸ்தான அலுவலக தீ விபத்து

திருப்பதி கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டதா? பாதுகாப்பான அலுவலக அறைக்குள் தீ பிடித்தது எப்படி? என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் ஊழல் செய்வதாகவும், பல கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டு இருப்பதாக அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

விளம்பரம்

மேலும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு, அபிவிருத்தி பணி என்று கமிஷன் தொகைக்காக கட்டிடங்கள் கட்டியது என பல புகார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் மீது கூறப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளும், நிர்வாக பொறுப்பில் இருந்தவர்களின் செயல்பாடுகளும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் மீது பத்தர்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்து பார்த்து விட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது ஆந்திர சிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அபிவிருத்தி பணிகள் என்ற பெயரில் தேவையில்லாமல் கட்டிடங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு, அதற்காக ஏராளமான கமிஷன் தொகை கைமாறியிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையானை இனி ஈஸியாக தரிசனம் செய்ய சூப்பர் சான்ஸ்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

அபிவிருத்தி பணிகளில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து ஆந்திர சிஐடி போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக தேவஸ்தான பொறியியல் துறையில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான ஆவணங்கள் எரிந்து விட்டன. தீ விபத்தில் தேவஸ்தான துணை கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவை தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. ஆவணங்கள் தீப்பிடித்து எரிவதை கவனித்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் உள்ளே சென்று தீ அணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதனால் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

விளம்பரம்
இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியல்…
மேலும் செய்திகள்…

தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து நடந்த பொறியாளர் பாஸ்கர் சேம்பரை ஆய்வு செய்து பின்னர் போலீசில் புகார் அளித்தனர். நிர்வாக அலுவலகத்தில் தீ பிடித்தது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் சில தகவல்களை கூறினார். “தேவஸ்தானத்தின் அனைத்து ஆவணங்களும் ஈ ஃபைல்களாக மாற்றப்பட்டு தேவஸ்தான சர்வரில் பாதுகாப்புடன் உள்ளன. எனவே, முக்கியமான ஆவணங்கள் எரிந்து விட்டதாக கவலைப்பட வேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க : ராமர், ராவணன் போருக்கு பிறகு வானர படை எங்கே போனது தெரியுமா?

விளம்பரம்

சனிக்கிழமை பெருமாளுக்கு உரியது என்பதால் பொறியாளர் பாஸ்கர் தனது அலுவலக சேம்பரில் ஊழியர்களுடன் சாமி கும்பிட்டு விளக்கு ஏற்றி வைத்திருந்தார். அந்த விளக்கிலிருந்து பரவிய தீயே தீ விபத்திற்கு காரணம் என்று தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள திருப்பதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருமலையில் சாலைகள் போட்டதில் மோசடி நடந்திருப்பதாக ஆந்திர சிஐடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாலை பணிகள் குறித்த ஆவணங்கள் தீயில் எரிந்து உள்ளன. இதனால் தீ பிடித்த விவகாரம் விபத்தா? அல்லது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என திருப்பதி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள இந்த விவகாரம், ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Tirumala Tirupati
,
Tirupathi

You may also like

© RajTamil Network – 2024