திருப்பதி பிரம்மோற்சவம், மகாளய அமாவாசை – சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

திருப்பதி பிரம்மோற்சவம், மகாளய அமாவாசை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பிரம்மோற்சவம், மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”திருப்பதி திருமலையில் ‘பிரம்மோற்சவம்’ திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு செப்.30 முதல் அக்.13-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இப்பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அக்.2-ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து அக்.1-ம் தேதி ராமேசுவரத்துக்கும், ராமேசுவரத்திலிருந்து அக்.2-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்கும் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!