Monday, October 21, 2024

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருமலை ஏழுமலையான் கோயில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று(அக். 4) கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் காலை 8 முதல் 10 மணி வரையிலும், இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. கருடவாகன சேவை மட்டும் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிக்க: உலகின் 2-வது பெரும் பணக்காரர் ஆனார் ஃபேஸ்புக் நிறுவனர்!

பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில்.

சிறப்பு தரிசனங்கள் ரத்து

முதியோா், ஊனமுற்றோா், கைகுழந்தைகளின் பெற்றோா் போன்றோருக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரோட்டோகால் விஐபிக்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். கருடசேவை நாளான 8-ம் தேதி விஐபி பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழுமலையான் ஆண்டு பிரம்மோற்சவத்துக்கு 1.32 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் தினமும் 24,000 சா்வதரிசன டோக்கன்கள் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும், அங்கப்பிரதக்ஷிண டோக்கன்கள் பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024