திருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பிரயாக்ராஜ்,

திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதைப்போல வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாதங்களுக்கும் கோவில்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து அயோத்தியில், ராம் ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ், வெளி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரசாதத்திற்கு "முழுமையான தடை" விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுராவில், தர்ம ரக்ஷா சங்கம், பழங்கள், பூக்கள் மற்றும் பிற இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட பிரசாதங்களுடன் வணிகரீதியாக தயாரிக்கப்பட்ட இனிப்புகளுக்குப் பதிலாக, 'பழங்கால பாணியில்' 'பிரசாதம்' ரெசிபிகளுக்கு திரும்புவதற்கான முடிவை அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024