Saturday, September 21, 2024

திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி – யார் யாருக்கு தெரியுமா?

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி – யார் யாருக்கு தெரியுமா?திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி - யார் யாருக்கு தெரியுமா?

ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முதலமைச்சர் திருமணத் திட்டத்தின் கீழ் ரூ.51,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

நாட்டில் உள்ள குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா போன்ற திட்டங்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக பலன்களை கொடுக்கின்றன.

விளம்பரம்

மத்திய அரசைத் தவிர மாநில அரசுகளும் தங்களது மாநில குடிமக்களுக்கு தனித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு உத்தரப்பிரதேசத்தில், ஏழைகளின் திருமணத்திற்கு உதவி செய்வதற்காக, ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் குழு திருமணத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களின் திருமணத்திற்காக மொத்தம் ரூ.51,000 அரசால் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை முழுமையாக ஒரேயடியாக வழங்கப்படுவதில்லை.

விளம்பரம்

இதையும் படிக்க:
உலகின் மிக உயரமான இரும்பு பாலத்தில் ஓடிய ரயில்… சாதனை படைத்த இந்திய ரயில்வே!

இந்த திட்டத்தில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முதலில் ரூ.10,000 வழங்கப்படுகிறது. பின்னர், திருமண விழாவுக்கு அலங்காரத்திற்காக ரூ.6,000 வழங்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு மணமகளின் வங்கிக் கணக்கில் ரூ.35,000 டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை மணமகளின் குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

தசை வளர்ச்சியை அதிகரிக்கும் 9 சைவ உணவுகள்.!
மேலும் செய்திகள்…

உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. பட்டியல் சாதி அல்லது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுவதால், சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், மணமகளின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், மணமகனின் குறைந்தபட்ச வயது 21ஆகவும் இருக்க வேண்டும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
marriage
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024