Friday, September 20, 2024

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கல்லாக மாறிய கதை தெரியுமா ?

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

துறவியின் சாபத்தால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கல்லாக மாறிய கதை !மனிதர்கள் கல்லாக காட்சியளிக்கும் கிராமம்

மனிதர்கள் கல்லாக காட்சியளிக்கும் கிராமம்

பாரதியபந்தா என்ற கிராமத்தின் பெயர் இரண்டு சொற்களால் ஆனது. முதலாவதாக இருக்கும் பாரதியா என்பதற்கு, ஆண் மற்றும் பெண்கள் இணைவது அல்லது திருமணம் என்று அர்த்தமாகும். இரண்டாவதாக இருக்கும் பந்தா என்பதற்கு கிராமம் அல்லது இடம் என்று அர்த்தம் வரும்.

திருமண ஊர்வலத்திற்கு செல்வது போன்ற வடிவிலான கற்களால் பல அமைந்துள்ளதால் இந்த கிராமத்திற்கு இப்படியொரு பெயர் வந்துள்ளது. இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள். சட்டீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே பாரதிய பந்தா. சுமார் 850-900 மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தைப் பற்றி புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமண ஊர்வலத்திற்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களும் கல்லாக மாறியதாக இந்தக் கதை கூறுகிறது. ஏனென்றால் இந்த கிராமத்தில் மனித வடிவத்திலான பல கற்கள் சாய்ந்த கோணத்தில் தரையில் புதைந்திருப்பதைக் காணலாம்.

விளம்பரம்

இந்தக் கதையில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இந்த பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் சிலவற்றைக் கூறுகிறார்கள். ஒருமுறை மன்னரின் திருமண ஊர்வலம் ஒன்று இந்த கிராமத்தின் வழியாகச் சென்றுள்ளது. அதில் ஏராளமான விருந்தினர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த ஊர்வலத்தில் யானைகள், குதிரைகள், விலங்குகள், மேளம், வேல்கம்புகள் போன்றவையும் இருந்துள்ளன. இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டு, நடனம் ஆடியபடியே திருமண ஊர்வலம் கடந்திருக்கிறது. இரவு நேரமானதும் ஊர்வலத்தில் வந்த அனைவரும் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்துள்ளனர்.

விளம்பரம்

மறுநாள் குளித்து முடித்துவிட்டு, தங்கள் தாய் தெய்வத்தை வணங்கிய திருமண விருந்தினர்கள் அங்கேயே ஒரு மிருகத்தை பலியிட்டனர். இந்த ஒரு சம்பவம் தான் அவர்களுக்கு வினையாகப் போய்விட்டது.

அகழாய்வில் கிடைத்த பொக்கிஷம்… வெம்பக்கோட்டையில் நடந்த அதிசயம்.!
மேலும் செய்திகள்…

துறவியின் சாபம்:

திருமண ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்கள் ஆடு பலியிட்டார்கள் அல்லவா. அந்த இடத்தின் அருகில் தான் ஒரு துறவியின் குடில் இருந்துள்ளது. அந்த துறவி அமைதியான சாத்வீக வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். அவர் வசித்து வந்த குடிசையைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்துள்ளது. இந்நிலையில் தனது குடிசையின் அருகே இரத்தக் கறை படிந்திருப்பதை கண்ட துறவி மிகுந்த கோபமடைந்துள்ளார். திருமண ஊர்வலத்திற்கு வந்திருந்த அனைவரும் கல்லாக மாறும்படி சபித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த விருந்தினர்கள், விலங்குகள், இசைக் கருவிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த அனைத்து பொருட்களும் கல்லாக மாறியது. அதனால் தான் இந்த கிராமம் பாரதிய பாதா என அழைக்கப்படுவதாக மக்கள் இன்றும் நம்புகின்றனர்.

விளம்பரம்

இந்த கற்களை அய்வு செய்த தொல்லியல் துறையினர், இது கல்லறையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இந்த நினைவுச்சின்னக்கற்கள் யாவும் எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டு இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவை அனைத்தும் இரண்டிலிருந்து மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த இடம் பழங்குடியினரின் சுடுகாடாகவும் கருதப்படுகிறது.

இந்த கற்கள் யாவும் மக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளின் நினைவாக புதைக்கப்பட்டதாக இருக்கலாம். ஏனென்றால் அருகிலுள்ள பழங்குடியினர் விடுதி கட்டுமானத்தின் போது சில கற்கள் நிலத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு கீழே, ஈட்டிகள், அம்புகள் போன்ற ஆயுதங்களும் கண்டெடுக்கபட்டன. இதை ஒரு கல்லறையாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் கருதுவதால், திருமண ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்களே கற்களாக மாறினார்கள் என்ற கிராமத்தினரின் நம்பிக்கை உறுதியாகிறது.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
mysterious death
,
village

You may also like

© RajTamil Network – 2024