திருமண மேடையிலேயே சத்தியம் செய்த அனந்த் – என்ன சொன்னார்?

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

Anant -Radhika Wedding : திருமண மேடையிலேயே சத்தியம் செய்த அனந்த்; பூரிப்படைந்த ராதிகா!Anant -Radhika Wedding : திருமண மேடையிலேயே சத்தியம் செய்த அனந்த்; பூரிப்படைந்த ராதிகா!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் நேற்று (ஜூலை 12) திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவின்போது, மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துக் கொண்டனர். திருமண மண்டபத்தில் நின்று, இருவருக்கும் பிரத்யேகமாக எழுதப்பட்ட வாக்குறுதிகளை வாசித்தனர். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த பாதுகாப்பான இடமாக வீடு இருக்கும் என்று ராதிகா தெரிவித்த நிலையில், அவருடன் சேர்ந்து தனது கனவுகளின் வீட்டை கட்டுவதாக அனந்த் அம்பானி உறுதியளித்தார்.

விளம்பரம்விளம்பரம்

”எங்கள் வீடு ஒரு இடமாக மட்டும் இருக்காது. அது எங்கள் அன்பையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும். நாங்கள் எங்கு இருந்தாலும், அது எங்களுடன் இருக்கும்” என்று ராதிகா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார். “ஸ்ரீகிருஷ்ணரின் ஆசியுடன் எங்கள் கனவுகளை ஒன்றாக்கி, நாங்கள் எங்கள் வீட்டை கட்டுவோம்” என்று அனந்த் அம்பானி உறுதியளித்தார்.

இதையும் படிங்க:
ரஜினி, அமிதாப்பிடம் ஷாருக்கான் செய்த செயல் – சுவாரஸ்ய நிகழ்வுகள்

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Anil Ambani
,
Jio
,
mukesh ambani
,
Nita Ambani
,
Reliance

You may also like

© RajTamil Network – 2024