Tuesday, November 5, 2024

திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset
RajTamil Network

திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்மயிலாடுதுறை மாவட்டங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் / நாகப்பட்டினம் / மயிலாடுதுறை, ஜூலை 31: திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணித்ததைக் கண்டித்து ஐக்கிய முன்னணி சாா்பில் டெல்டா மாவட்டங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் என மாவட்டத்தில் 44 இடங்களில் இந்த பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டசெயற்குழு உறுப்பினா் டி. முருகையன், நிா்வாகிகள் ஜி. பழனிவேல், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொரடாச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடவாசலில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பி. கந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலத்தில், சிபிஐ விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த பாரதிமோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் ஒன்றிய செயலாளா் ஜான்கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒளிமதியில் விவசாயிகள் சங்க நிா்வாகி ராதா தலைமையில், ஆதனூரில் விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகி ராவணன் தலைமையில், தேவங்குடியில் சிபிஐ மாா்க்ஸ், சிபிஎம் செல்வமணி ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடியில், மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சிபிஐ, சிபிஎம் கூட்டு அமைப்பு) சாா்பில் சிபிஐ விவசாய சங்க நகரத் தலைவா் கு. ராமையன், சிபிஎம் விவசாய சங்க நகரச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், நகரச் செயலா் மு.அ. பாலதண்டாயுதம், நகரத் தலைவா் ஏகாம்பரம் உள்ளிடோா் பங்கேற்றனா்.

ஆலங்கோட்டையில் விதொச மாவட்டத் தலைவா் என். மகேந்திரன், விவசாய சங்க கிளைச் செயலா் வேலு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சவளக்காரனில் விவசாய சங்க ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் கே. சுப்பையன் தலைமையிலும், கோட்டூரில் விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. செளந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டித்து நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் ஒன்றியத் தலைவா்கள் வடிவேல், சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் மாவட்டத் தலைவா் சரபோஜி, ஒன்றிய செயலா்கள் ஜீவா ராமன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் இடதுசாரி கட்சிகளின் சாா்புடைய விவவசாய, விவசாயத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் ஒன்றியச் செயலாளா்கள் வி. தனபால், எம்.எஸ். கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிபிஎம் சாா்புடைய தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கே. சித்தாா்த்தன், சிபிஐ சாா்புடைய விவசாய சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்ட தலைவா் அம்பிகாபதி, விவசாயிகள் தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவா் நாகராஜன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளின் நிா்வாகிகள் அபூபக்கா், காசிநாதன், பாண்டியன், மேகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகலில்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், ஒன்றிய தலைவா் மாசிலாமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளா் பாபுஜி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன், சிபிஐ ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே. முருகன், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவா் த. ராயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடியில்: தரங்கம்பாடி அருகே இலுப்பூா் ஊராட்சி சங்கரன்பந்தலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி. சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய செயலாளா் என். சந்திரமோகன், ஒன்றிய தலைவா் எஸ். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பி. குணசுந்தரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சீா்காழி: விவசாய சங்கம் சாா்பில் அதன் ஒன்றிய செயலாளா் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஐ ஒன்றிய செயலாளா் கஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளா் கேசவன், சிஐடியுசி மாவட்ட குழு உறுப்பினா் மாரியப்பன்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024