Tuesday, October 22, 2024

தில்லியில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: பாஜக தேசிய பொதுச்செயலர்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தில்லியில் சாலைகள் மோசமடைந்து வருவதற்கும், மாசு அதிகரிப்பதற்கும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தான் பொறுபபு என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் விமர்சித்தார்.

விவேக் விஹார் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள சுரங்கப்பாதையை பாஜக தொண்டர்களுடன் இணைந்து சேதமடைந்த சாலைகளை துஷ்யந்த் குமார் ஆய்வு செய்தார். அப்போது கௌதம் கூறுகையில்,

தலைநகரில் உள்ள சாலைகளில் பழுதும், காற்று மாசும் நிறைந்துள்ளது, இதற்கு கேஜரிவால் மட்டுமே பொறுப்பு. புதிய பள்ளிகளையோ, மருத்துவமனைகளையோ அவர் கட்டவில்லை நகரில் வளர்ச்சியைக் கொண்டுவரத் தவறிவிட்டார்.

இதையும் படிக்க: ‘மரியாதை, அங்கீகாரம் இல்லை’ – நாதக முக்கிய நிர்வாகி விலகல்! பரபரப்பு அறிக்கை!!

மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. தில்லிக்கு திறமையான மற்றும் முற்போக்கான அரசு தேவை. மேலும் நகரத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரிக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் கேஜரிவாலை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல இரட்டை இயந்திர அரசு வழிவகுக்கும்.

பாஜகவின் தலைமையின் கீழ் தில்லியில் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும், சாலைகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிக்க: ஜப்பான் விமான நிலையத்தில் வெடித்த 2-ம் உலகப் போர் குண்டு!

தில்லியில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தீவிர களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் தில்லி முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாலைகளை மதிப்பீடு செய்தனர். தீபாவளிக்குள்

தேசிய தலைநகரின் சாலைகளில் பழுதுபார்க்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித் துறை பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024