தில்லி: ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தில்லியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு தில்லியில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு சோதனைகளுக்கு மத்தியில், இன்று (அக். 2) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் சிக்கியது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி மதிப்பில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போதிலும், இதன் பின்னணியில் பலர் இருக்கக் கூடும் என்பதால் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமையில் திலக் நகர் பகுதியில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரிடம் இருந்து 600 கிராம் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

2 குண்டு பல்பு எரியும் விவசாயி வீட்டுக்கு ரூ.1,01,580 மின் கட்டணமா?

மேலும், அதே நாளில் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், துபையைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ. 24.9 கோடி மதிப்பிலான சுமார் 1.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தில்லி முழுவதும் போதைப்பொருள் சோதனை சூடுபிடித்தது.

You may also like

© RajTamil Network – 2024