தில்லி – விசாகப்பட்டினம் ஏர் இந்தியா விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

விசாகப்பட்டினம்: தில்லி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் விசாகப்பட்டினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-471-க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதன்கிழமை காலை பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.

விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் ராஜா ரெட்டிக்கு கிடைத்த தகவலின்படி, தில்லியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏஐ-471 விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று மர்ம ஒருவர் தொலைபேசியில் ஏர் இந்தியா நிலைய பாதுகாப்பு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு துண்டித்துள்ளார்.

முதலில் தில்லி காவல்துறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது, இதையடுத்து ஏர் இந்தியா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்துள்ளது, அவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏர் இந்தியா அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

ராகுலைச் சந்தித்த வினேஷ் போகத், புனியா! ஹரியாணா தேர்தலில் போட்டியா?

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி அவர்களின் உடமைகள் மற்றும் விமானத்தை ஏர் இந்தியா பாதுகாப்புப் படையினரும், அதைத் தொடர்ந்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) குழுவினரும் முழுமையாகச் சோதனையிட்டனர், அங்கு அதிகாரிகள் விமானத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் மேற்கொண்ட பிறகு, தில்லிக்கு புறப்படும் பயணிகளை ஏற்றிச் செல்ல விமானம் அனுமதிக்கப்பட்டது.

தற்போது, ​​தவறான தகவல் கொடுத்த பயணியை கைது செய்யும் முயற்சியில் தில்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக விமானம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது அனைவரது மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024