‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள 'தி கோட்' முதல் நாள் வசூல் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியா முழுவதும் ரூ. 43 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், தமிழ்நாட்டில், ரூ.38.3 கோடியும், தெலுங்கில் ரூ. 3 கோடியும் மற்றும் இந்தியில் ரூ.1.7 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிகிறது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக வெளியான விஜய்யின் 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

G.O.A.T at the Box office @Ags_productionpic.twitter.com/s6luZxQO6C

— Archana Kalpathi (@archanakalpathi) September 6, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024