‘தி கோட்’ படம் பார்த்தீர்களா? – செய்தியாளரின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

’தி கோட்’ படம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்டக்கப்பட்டது.

சென்னை,

விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். படம், முதல் நாளிலேயே 126 கோடியை தாண்டி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கோட் படம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்டக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், "புரட்சி தலைவர் எம்ஜிஆர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய பிறகு நானும் திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024