தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் முத்துசாமி

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நிலையங்களுக்கு இடையே உள்ள நிலத்தை பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024