தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு – சென்னை சிறப்பு ரயில் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06209) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06210) இரவு 10.50 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.

இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். ஹூப்ளியில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து நவ.3-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 07311/12) இயக்கப்படும்.

அதுபோல், யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு அக்.30-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து அக்.31-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 06565/66) இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நீட்டிப்பு: தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிச.1-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024