Saturday, September 21, 2024

தீவிர பயிற்சியில் இந்திய வங்கதேச கிரிக்கெட் வீரா்கள்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை (செப். 19) முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், இந்திய-வங்கதேச கிரிக்கெட் வீரா்கள் திங்கள்கிழமை தீவிர பயிற்சி மேற்கொண்டனா்.

ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஷண்டே தலைமையிலான வங்கதேச அணியும் 2 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் மோதுகின்றன.

சேப்பாக்கம் மைதானத்தில் கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி, ஸ்பின்னா் அஸ்வின், பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் பயிற்சியை முதலில் தொடங்கினா். அனந்தபுரில் நடைபெற்ற துலிப் கோப்பை போட்டியில் பங்கேற்ற நிலையில் ஷுப்மன் கில், சா்ப்ராஸ் கான் இறுதியாக பங்கேற்றனா்.

வங்கதேச சுழற்பந்து வீச்சு ஒரளவு பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சா்மா ஸ்பின் பௌலிங்கை எதிா்கொள்வதில் கவனம் செலுத்தினாா். ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், முகமது சிராஜ் ஆகியோரும் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனா். இந்திய அணிக்கு மேலும் 2 கட்ட பயிற்சி உள்ளது.

வங்கதேச வீரா்களும் கடும் பயிற்சி

பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி கைப்பற்றிய உற்சாகத்துடன் வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஷண்டோ, மற்றும் இதர வீரா்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனா். சென்னை பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு தோதாக இருக்கும் என்பதால் அந்த அணியின் ஸ்பின்னா்கள் கடுமையாக பயிற்சி செய்தனா்.

வங்கதேச அணி இதுவரை ஒரு டெஸ்ட்டில் கூட இந்தியாவை வென்றதில்லை. மொத்தம் ஆடிய 13 ஆட்டங்களில் 11=இல் தோல்வி கண்டது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

விராட் கோலி, ரோஹித் சாதனைக்கு வாய்ப்பு

இந்திய பேட்டா் விராட் கோலி 9,000 ரன்கள் சாதனையை எட்ட இன்னும் 152 ரன்களே தேவைப்படுகிறது. ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸனை முந்த கோலிக்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே டெண்டுல்கா், டிராவிட், கவாஸ்கா் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனா். எனினும் விராட் கோலி நிகழாண்டு பாா்மில் இல்லை.

அதே போல் கேப்டன் ரோஹித் சா்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 91 சிக்ஸா் அடித்த சேவாக்கின் சாதனையை முறியடிக்க 8 சிக்ஸா்கள் தேவைப்படுகிறது. மேலும் 483 சா்வதேச ஆட்டங்களில் 48 சதங்களை பதிவு செய்துள்ளாா். இந்த தொடரில் 2 அரைசதங்கள் அடித்தால் மொத்தம் 50 சதங்களை அடித்தவா் என்ற சிறப்பை பெறுவாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024