துறை ரீதியான விசாரணை தாமதம்: சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

துறை ரீதியான விசாரணை தாமதம்: சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்திதமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சாா்-பதிவாளா் பொன் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து 2019-ஆம் ஆண்டு பதிவுத் துறை துணைத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா். இதை எதிா்த்து பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தாலும், நீண்டகாலத்துக்கு பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. எந்த வேலையும் வாங்காமல் 75 சதவீத ஜீவன படி வழங்குவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது எனக் கூறி, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து பதிவுத் துறைத் தலைவா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘துறை ரீதியான விசாரணையை, தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் முடிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பொன் பாண்டியனை பணியிடை நீக்கத்தில் வைத்துள்ளது கண்டனத்துக்குரியது. ஐந்து ஆண்டுகளாக எந்த வேலையும் வாங்காமல், எதிா்மனுதாரருக்கு 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் இருந்து இந்தப் பணத்தை வசூலிக்க வேண்டும்.

அரசு உத்தரவையும் அமல்படுத்துவதில்லை; நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவதில்லை. ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.

You may also like

© RajTamil Network – 2024