Tuesday, November 5, 2024

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – அதிகாரிகளின் மனு ஏற்பு

by rajtamil
0 comment 67 views
A+A-
Reset

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைதூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கு

தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் நடந்த காலகட்டத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை, சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் என வகைப்படுத்தி சேகரித்து, அறிக்கை அளிக்க லஞ்சஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விளம்பரம்

இதை எதிர்த்து அரசு அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்து விவரங்களை சேகரிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடைவித்த நீதிபதிகள், எதிர்மனுதாரரான ஹென்றி திபேன் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Supreme court
,
thoothukudi firing
,
thoothukudi gun shoot
,
thoothukudi protest
,
Thoothukudi Sterlite

You may also like

© RajTamil Network – 2024