தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டது. இப்பயுல் கூண்டு ஏற்றுவதற்கு முன்பே ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை முதல் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். | – தகவல்: சு.கோமதிவிநாயகம், கி.தனபாலன்

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு