Friday, September 20, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி.இந்திய மகளிரணிஇந்திய மகளிரணிபடம் | பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 23) பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிரணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டாஸ்மின் பிரிட்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களும், நடைன் டி கிளர்க் 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷ்ரேயங்கா பாட்டில் மற்றும் பூஜா வஸ்த்ரகார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வெர்மா சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், ஷஃபாலி வெர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், ஸ்மிருதி மந்தனாவுடன் பிரியா புனியா ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். பிரியா புனியா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 10 ரன்களில் தொடர்ச்சியாக 3-வது முறையாக சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவர் 83 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியை நோக்கி அழைத்துச் சென்றது. இருப்பினும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி 40.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 ரன்களுடனும் களத்தில், ரிச்சா கோஷ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது

You may also like

© RajTamil Network – 2024